Print this page

"எனது காதல் " குடி அரசு - பத்திராபர் குறிப்பு - 15.02.1931

Rate this item
(0 votes)

மேற்கண்ட தலைப்பின்படி 'எனது காதல்' என்பதாக தலைப் பெயரிட்டு கலப்பு மணம் செய்து கொள்ள முடிவுசெய்திருப்பதாகக்கண்டு ஒரு கடிதம் ராமநாதபுரம் ஜில்லாவில் இருந்து ஒரு பெண்மணி எழுதியதாக எழுதப்பட்டு பிரகரிப்பதற்காக நமக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. 

அதில் கையெழுத்தில்லாததாலும், எழுத்துக்கள் பெண் எழுத்துத் தானா என்று சந்தேகிக்கப்படக்கூடியதாகவும் இருப்பதால் அதை பிரகரிக் கக்கூடவில்லை. ஆனால் அக்கடிதக் கொள்கைக்கு நாம் சார்பளிக்க வேண்டி, யது அவசியமாயிருப்பதால் அதை பிரசுரிக்க வேண்டியது அவசியமெனவும் தோன்றுகின்றது. 

ஆகவே கையெழுத்துடனும், அது எழுதப்பட்ட பெண்ணின் படம் அல்லது கைரேகையுடனும் நமக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பப்பட்டால் பிரசுரிக்கத் தயாராயிருக்கிறோம். அதில் கண்டகாரியம் நடைபெறவும் நம் மால் ஆன அனுகூலம் செய்யத்தயாராயிருக்கின்றோம். ய-ர். 

குடி அரசு - பத்திராபர் குறிப்பு - 15.02.1931

 
Read 22 times